tamilnadu

img

வாக்குகள் சிதறியதால் ஆதாயமடைந்த பாஜக!

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்தைப் போன்றே, இங்கும் மகிழ்ச்சிக்குரிய வெற்றியைப் பாஜக ஈட்டவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2017 தேர்தலில் வென்ற ஜைதாபூர் தொகுதியை இம்முறை சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக இழந்துள்ளதுடன், 7 தொகுதிகளில் கிடைத்த வெற்றி என்பதே கூட, எதிர்க்கட்சிகளின் வாக்கு சிதறல் காரணமாகவே சாத்தியமாகி உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, அது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. தேர்தலை எதிர்கொண்ட 11 தொகுதிகளில் 2017-ஆம் ஆண்டில் சமாஜ்வாதி வென்றது ஒரே ஒரு தொகுதிதான். தற்போது ஜைதாபூர் தொகுதியை பாஜக-விடம்இருந்தும் ஜலால்பூர் தொகுதியை பகுஜன் சமாஜ்கட்சியிடம் இருந்தும் சமாஜ்வாதி கட்சி கைப்பற்றி யுள்ளது. ஒருவேளை, மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் தொடர்ந்திருந்தால், உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் வேறு விதமாக வும்கூட இருந்திருக்கும்.கங்கோ தொகுதியில், பாஜக 68 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இங்கு காங்கிரஸ் 62 ஆயிரத்து 881 வாக்குகளையும், சமாஜ்வாதி கட்சி, 57 ஆயிரத்து 374 வாக்குகளையும், பகுஜன்சமாஜ் கட்சி 32 ஆயிரத்து 276 வாக்குகளையும் பெற்றுள்ளன. சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜூம் இணைந் திருந்தால், இங்கு பாஜக-வை தோற்றிருக்கும். மேலும் இந்த தொகுதியில் காங்கிரஸ் 2-ஆவது இடத்திற்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.மாணிக்பூர் தொகுதியில் பாஜக 66 ஆயிரத்து 310 வாக்குகளைப் பெற்றுள்ளது. இங்கு சமாஜ்வாதி மட்டும் பெற்றது 53 ஆயிரத்து 470 வாக்குகள். பகுஜன் சமாஜ் 38 ஆயிரத்து 296 வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ்தனியாக 8 ஆயிரத்து 233 வாக்குகளைப் பெற்றுள்ளது.இதேபோல பால்கா, கோவிந்த் நகர், லக்னோ கண்டோண்மெண்ட் தொகுதிகளிலும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்தனி யாக போட்டியிட்டதும், வாக்குகள் சிதறியதுமே பாஜக-வுக்கு சாதகமாகி இருக்கிறது என்று கருத்துக்கள் முன்னுக்கு வந்துள்ளன.

;